News April 17, 2025
அதிமுக கூட்டணியில் தொடருமா புதிய தமிழகம்?

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற <<16120626>>கிருஷ்ணசாமி<<>>, பங்கு தருபவர்களிடம் மட்டுமே புதிய தமிழகம் கூட்டணி வைக்கும் என்று தெரிவித்துள்ளார். பட்டியல் வெளியேற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் செய்து அவர் மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக முக்கிய தலைவர்கள், அவரிடம் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியதாக கூறப்படுகிறது.
Similar News
News August 13, 2025
ஆக.16 லீவ்! ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் கிடையாது

வாரந்தோறும் சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்று வருகிறது. ஆனால், வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. இதனால், அன்றைய தினம் தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் சனிக்கிழமை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறாது என்று அரசு தரப்பில் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News August 13, 2025
முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை தேவை: அன்புமணி

இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகள் மூலம் 28,516 பேருக்கு வேலை கிடைக்கும் என CM உறுதியளித்ததை சுட்டிக்காட்டிய அவர், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என சாடியுள்ளார். 10.62 லட்சம் கோடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தானபோதும், ஈர்க்கப்பட்ட முதலீடு வெறும் ₹18,498 கோடிதான் எனவும் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
எத்தனால் கலப்பு பெட்ரோலால் பாதிப்பு இல்லை: மத்திய அரசு

எத்தனால் கலந்த பெட்ரோலால் வண்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பால் 30% கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதாகவும், எத்தனால் கலப்பு பெட்ரோலால் வண்டிகள் பழுதடைவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும், ஓட்டும் விதம், பராமரிப்பு உள்ளிட்ட காரணிகள் தான் வண்டியின் மைலேஜை தீர்மானிப்பதாகவும் தெரிவித்துள்ளது.