News April 17, 2025
ஜனநாயக உரிமைகளை மதிக்காத போலீஸ்: அன்புமணி

அறவழியில் போராட்டம் நடத்திய பாமக மாவட்ட செயலாளர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து சிறையில் வைத்துள்ளதாக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் காவலர்கள் தாக்கியதாக குற்றம் சாட்டிய அவர், அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை காவல்துறை மதிக்க வேண்டும்; அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடக்கூடாது. கைது செய்யப்பட்ட பாமகவினரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
Similar News
News May 8, 2025
10-ம் வகுப்பு தேர்வு முடிவு: 15-ம் தேதிக்கு முன்பு வெளியீடு?

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வருகிற 15-ம் தேதிக்கு முன்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் இன்று 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இதையடுத்து 10-ம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என மாணவர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், அந்தத் தேர்வு முடிவு 15-ம் தேதி (அ) அதற்கு முன்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. என்ன ரெடியா?
News May 8, 2025
10 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

10 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோட்டில் இடி, மின்னலுடன் மாலை 4 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என IMD கூறியுள்ளது. தேனி, பெரம்பலூர், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது. என்ன உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க.
News May 8, 2025
தொடரும் பீரங்கி தாக்குதல்

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் பீரங்கி தாக்குதல் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தார், ரஜவுரி பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 16 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, மார்ட்டர் மற்றும் ஹெவி ஆர்ட்டிலரி பீரங்கிகளை கொண்டு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.