News April 17, 2025
டிடிவி உடன் இணக்கமாக செல்லும் இபிஎஸ்?

2026 சட்டப்பேரவைத் தேர்தல் சூடு ஆரம்பித்துள்ள நிலையில் டிடிவிக்கு எதிரான வழக்கை EPS வாபஸ் பெற்றுள்ளார். சமீபத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்தது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்த TTV, OPS நிலை என்ன ஆகும் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், தென்மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூக வாக்குகளை குறிவைத்து, டிடிவி உடன் இணக்கமாக செல்ல முடிவெடுத்து, இபிஎஸ் வழக்கை வாபஸ் வாங்கியதாக கூறப்படுகிறது.
Similar News
News April 19, 2025
இரட்டை இலை மேலே தாமரை மலரும்: நயினார்

தமிழக பாஜகவின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுக கூட்டணி தொடர்பான கருத்துக்களை யாரும் தெரிவிக்க வேண்டாம் எனவும் தலைமையின் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வரும் தேர்தலில், இரட்டை இலை மேலே தாமரை மலரும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.
News April 19, 2025
புதுச்சேரி CM வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி CM ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் உதவியுடன் ரங்கசாமியின் வீடு முழுவதும் சோதனையிட்டனர். இறுதியில் அது புரளி என தெரியவந்ததையடுத்து போலீஸார் நிம்மதியடைந்தனர். இ-மெயிலில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
News April 19, 2025
ஹிந்தியில் பெயர் ஏன்? NCERT விளக்கம்

இந்தியாவின் கலாசாரம், அறிவியல் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவே ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்களுக்கு பெயரிடப்பட்டதாக NCERT விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, CBSE பாடப்புத்தகங்களுக்கு மிருதங், சந்தூர், கணித மேளா, கணித பிரகாஷ், பூர்வி, கிருதி, சிதார் என பெயரிடப்பட்டது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்த நிலையில், NCERT தற்போது விளக்கம் அளித்துள்ளது.