News April 17, 2025
இசைக்கு வந்த சோதனை… செயலிழந்த Spotify..

பாடல்களை உள்ளடக்கிய Spotify தளம் உலகளவில் செயலிழந்ததால் பயனர்கள் சிக்கலை சந்தித்தனர். செல்போன், டெஸ்க்டாப் என அனைத்திலும் பாதிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் மட்டும் சரியாக பிளே ஆகும் நிலையில், செயலியின் மற்ற பயன்பாடுகள் தடைபட்டுள்ளது. பிரச்னையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக Spotify தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க Spotify வேலை செய்யுதா?
Similar News
News January 13, 2026
BREAKING: விஜய்க்கு ஆதரவு கொடுத்தார் ராகுல் காந்தி

‘ஜன நாயகன்’ சென்சார் விவகாரத்தில் விஜய்க்கு ராகுல் ஆதரவு தெரிவித்துள்ளார். ‘ஆட்சியில் பங்கு’ எனக்கூறி திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்., தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தமிழக காங்., தலைவர்களை தொடர்ந்து, ராகுலும் ‘ஜன நாயகன்’ படத்தை தடுக்கும் முயற்சி தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல் என குரல் கொடுத்துள்ளது அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
News January 13, 2026
பொங்கல் பண்டிகை.. மது பிரியர்களுக்கு அதிர்ச்சி

பொங்கல் பண்டிகைக்கு, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வைத்திருப்பதாக The New Indian Express செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். காலாவதியான மதுவை விற்பதால் பாதிக்கப்படுவது CM குடும்பமோ, அமைச்சர்கள் குடும்பமோ அல்ல; அப்பாவி பொதுமக்களின் குடும்பங்கள் மட்டுமே; பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட முதல்வருக்கு அருவருப்பாக இல்லையா என்று காட்டமாக சாடியுள்ளார்.
News January 13, 2026
ஜீவனாம்சமாக ₹15,000 கோடி கொடுக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஜீவனாம்சமாக ₹15,000 கோடியை அளிக்கவுள்ளார். கலிபோர்னிய நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்திய தொழிலதிபர் ஒருவரின் Costliest விவாகரத்து என கூறப்படும் இது, உலகளவில் 4-வது மிக காஸ்ட்லியான விவாகரத்தாம். 1993-ல் பரிமளா ஸ்ரீனிவாசனை திருமணம் செய்த ஸ்ரீதர் வேம்புக்கு ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


