News April 16, 2025
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு குறை தீர்க்கும் கூட்டம்

ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.05.2025 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் இயக்குநர் மூலம் நடத்தப்பட உள்ளது. ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு 21.04.2025 முதல் 30.04.2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News September 28, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

செங்கல்பட்டில் இன்று (செப்.28) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 28, 2025
செங்கல்பட்டு: IOB வங்கியில் வேலை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, MBA, M.Sc, MCA, M.E/M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் Rs.64,820 முதல் Rs.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி 03.10.2025 ஆகும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 28, 2025
செங்கல்பட்டு மக்களே! இலவச தையல் மிஷின் வேண்டுமா?

தமிழக அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் தேவை இல்லை. விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். செங்கல்பட்டு மக்களே இதனை SHARE பண்ணுங்க