News April 16, 2025
ஹஜ் பயணம் – பிரதமருக்கு CM ஸ்டாலின் கடிதம்

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து குறித்து பிரதமர் மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் ஹஜ் புனிதப் பயணத்திற்கு ஆவலுடன் தயாராகி வரும் தமிழகம் உட்பட ஆயிரக்கணக்கான இந்திய இஸ்லாமியர்களுக்கு இந்த செய்தி மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி உள்ளதாக அவர் தெரிவித்தார். சவுதி அரசிடம் இதுகுறித்து பேசி தீர்வு காண வேண்டும் எனவும் CM ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
Similar News
News January 26, 2026
ஹிந்தியால் பல தாய்மொழிகள் அழிந்துவிட்டது: உதயநிதி

மத்திய அரசின் ‘ஹிந்தி திணிப்பை’ தமிழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என உதயநிதி தெரிவித்துள்ளார். மொழி உரிமை என்று வரும்போது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எடுத்துக்காட்டாக தமிழ்நாடு இருப்பதால், மத்திய பாஜக அரசுக்கு கோபம் வருகிறது என சாடிய அவர், ஹிந்தி திணிப்பால் ஹரியானா (ஹரியான்வி), பிஹார் (பிஹாரி), சத்தீஸ்கர் (சத்தீஸ்கரி), உ.பி.,யில் (போஜ்புரி) தாய்மொழிகள் அழிந்துவிட்டதாக தெரிவித்தார்.
News January 26, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் சக்கரபாணி மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் கோதுமை விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுகிறது என்றும், ஜனவரி மாதத்தில் மட்டும் 30 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். உங்களுக்கு ரேஷனில் கோதுமை கிடைத்ததா?
News January 26, 2026
படுக்கையறையில் இருக்கக் கூடாத 10 பொருள்கள்

படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருள்கள் வாஸ்துப்படி தீமைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அவை: *டீ, காபி கப், சாப்பிட்ட தட்டுகள் உள்ளிட்ட கழுவப்படாத பாத்திரங்கள் *தலையணைக்கு கீழே பேப்பர், புத்தகம், தங்க நகைகள் *படுக்கையில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ், செல்லப்பிராணி. இவை தூக்கத்தை பாதிப்பதுடன், நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல படுக்கைக்கு நேராக கண்ணாடி இருக்கக் கூடாது.


