News April 16, 2025
முதலமைச்சர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல் முறையாக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு கவர்னர் வேந்தராக நீடித்துவந்த நிலையில், அதனை மாற்றும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையிலும், சட்டப்போராட்டம் நடத்தி அரசு அதனை வென்றது. இதனையடுத்து, வேந்தராக முதல்வர் இன்று கூட்டத்தை நடத்தினார்.
Similar News
News September 18, 2025
சருமம் பளபளக்க உதவும் ஜூஸ்

பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறி சாறுகள் சருமத்தின் பொலிவை அதிகரிக்கின்றன. அவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. அவை என்ன ஜூஸ் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க. மேலும், வேறு ஏதேனும் பழம் அல்லது காய்கறி உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.
News September 18, 2025
பாக் – சவுதி ஒப்பந்தம்: அலர்ட் மோடில் இந்தியா

<<17745829>>பாகிஸ்தான்- சவுதி <<>>அரேபியா இடையே பரஸ்பர பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதன்படி ஒருவர் தாக்கப்பட்டால், மற்றொருவர் உதவிக்கு செல்ல வேண்டும். இந்நிலையில், தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலை அடிப்படையில், நிலைமையை உன்னிப்பாக கவனிப்பதாக தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அனைத்து வழிகளிலும் நாட்டின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதியுடன் செயல்படுவதாக கூறியுள்ளது.
News September 18, 2025
Beauty Tips: உங்கள் முகத்தில் செய்யவே கூடாத 3 தவறுகள்

உங்கள் முகத்துக்கு ஏற்றார் போல நல்ல Facewash-ஐ வாங்கி பயன்படுத்தினாலும், அதனால் நல்ல ரிசல்ட் கிடைக்கவில்லையா? இந்த 3 தவறுகளை பண்றீங்களான்னு செக் பண்ணுங்க. ➤Facewash-ஐ அப்ளை செய்து 1 நிமிடத்துக்கு மேல் கழுவாமல் இருந்தால் முகம் ட்ரை ஆகும் ➤முகத்தை அழுத்தி தேய்க்க வேண்டாம். Gentle-ஆக மசாஜ் செய்யுங்கள் போதும் ➤அடிக்கடி Facewash கொண்டு முகத்தை கழுவவேண்டாம். உங்கள் தோலை இது பாதிக்கலாம். SHARE.