News April 16, 2025

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான ஆய்வுக் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலநிலை மாற்றத்திற்கான விவசாய உத்திகள் குறித்த விவசாயிகளுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தலைமையில் நேற்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விவசாய உத்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

Similar News

News November 4, 2025

மயிலாடுதுறை: ஒரே நாளில் பெறப்பட்ட 265 மனுக்கள்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். இதில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, உதவித்தொகை, வங்கி கடன், அடிப்படை வசதி, நில பிரச்சினை தொடர்பாக மொத்தம் 265 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

News November 4, 2025

மயிலாடுதுறை: பூச்சி மருந்து குடித்து தற்கொலை!

image

மேமாத்தூரைச் சேர்ந்தவர் குமார் (40) தொழிலாளி. இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன வேதனை அடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்தார். இதனால் மயங்கி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

News November 4, 2025

மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்

error: Content is protected !!