News April 16, 2025
ஜிப்லிக்கு நோ சொல்லுங்க; சைபர் கிரைம் எச்சரிக்கை!

திண்டுக்கல் மக்களே, ஜிப்லி(Ghibli) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் க்ரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க! உங்க நண்பர்களும் Ghibli ஆபத்தை தெரிஞ்சுக்கட்டும்.
Similar News
News December 21, 2025
திண்டுக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.22) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, தாமரைப்பட்டி, வேல்வார்கோட்டை, முத்தனங்கோட்டை, பாளையம், அணியாப்பூர், குஜிலியம்பாறை வடக்கு, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, அய்யன்கோட்டை, நத்தம், வேலம்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, சேத்தூர், எரியோடு, நாகையகோட்டை, வெல்லம்பட்டி பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 21, 2025
திண்டுக்கல் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

திண்டுக்கல், வத்தலகுண்டு, சிவஞானபுரம் புதூரை சேர்ந்தவர் செல்லகண்ணு. இவர் தனது மனைவி, மகனுடன் பைக்கில் வத்தலகுண்டு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். மேலகோயில்பட்டி பிரிவில் வந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் செல்லகண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி, மகன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 21, 2025
திண்டுக்கல் மக்களே: காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சமூக ஊடக தளம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை எளிதில் கண்டறிவதற்கும், சிசிடிவி கேமரா மிக அவசியமானது என காவல்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகள், கடைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில், சிசிடிவி கேமராக்களை பொருத்தி பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்துள்ளனர்.


