News April 4, 2024
ஏப்ரல் 4: வரலாற்றில் இன்று

▶1818 – அமெரிக்கக் கொடியை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அங்கீகரித்தது.
▶1939 – இரண்டாம் பைசல் ஈராக்கின் மன்னரானார்.
▶1968 – அமெரிக்காவின் கருப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்பட்டார்.
▶1968 – நாசாவின் ‘அப்பல்லோ 6 விண்கப்பல்’ விண்ணுக்கு ஏவப்பட்டது.
▶1973 – இரட்டை கோபுரங்கள் (Twin Tower) நியூயார்க்கில் திறக்கப்பட்டன.
▶1975 – மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.
Similar News
News January 16, 2026
மாடுகளுக்கு பொங்கல் ஓவரா கொடுக்காதீங்க.. டேஞ்சர்!

பசு மாட்டிற்கு பொங்கல், அரிசி போன்றவற்றை குறிப்பிட்ட அளவில்தான் கொடுக்க வேண்டும் என கால்நடை டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். சர்க்கரை, எண்ணெய் அதிகமாக உள்ள உணவுகளால், மாடுகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவது, நரம்பு மண்டல பாதிப்பு, வயிறு உப்புசம் உள்ளிட்டவை ஏற்படுவதால் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக என எச்சரிக்கின்றனர். பொங்கல், அரிசி போன்றவற்றை மாடுகளுக்கு ஒரு கைப்பிடி அளவு மட்டுமே வேண்டுமாம்.
News January 16, 2026
BREAKING: தங்கம் விலை குறைந்தது

மாட்டுப் பொங்கல் தினமான இன்று(ஜன.16) தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹13,230க்கும், சவரன் ₹1,05,840-க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 வாரத்தில் சவரனுக்கு ₹5,000 வரை உயர்ந்த தங்கம், இன்று குறைந்துள்ளதால், பொங்கல் சீர், சுப முகூர்த்த தினத்திற்கு நகைகள் வாங்க நினைத்தோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
News January 16, 2026
யாருடன் கூட்டணி: ராமதாஸ் புதிய ஸ்கெட்ச்

தொகுதி எண்ணிக்கையைவிட, ராமதாஸை சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையுடன்தான், அதிமுக கூட்டணியில் அன்புமணி (பாமக) இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராமதாஸ் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் அன்புமணிக்கு ஒதுக்கும் தொகுதிகளை விட, கூடுதலான தொகுதிகள் ஒதுக்கீடு செய்தால் திமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் ரெடியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.


