News April 16, 2025
சாதிப் பெயர்களை நீக்குக: ஐகோர்ட் அதிரடி

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதே போல் பள்ளிப் பெயர்களில் நன்கொடையாளர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும், சாதி இருக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. அரசு நடத்தும் சீர்திருத்தப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்ற பெயர்களை மாற்றி அரசுப் பள்ளி என பெயர் சூட்டவும் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
Similar News
News January 17, 2026
EPS காலில் விழுந்த பாமக MLA

சேலத்தில் அதிமுக சார்பில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த EPS-க்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்த பாமக MLA சதாசிவம், திடீரென்று அவரது காலில் விழுந்து கும்பிட்டார். ஆனால், அதை கண்டுகொள்ளாமல், EPS எதிரில் இருந்த நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். இதுதொடர்பான போட்டோ SM-ல் வெளியான நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA, காலில் விழுவது சரியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News January 17, 2026
முன்னாள் அமைச்சர் பீமன்னா காந்த்ரே காலமானார்

சுதந்திரப் போராட்ட வீரரும், Ex அமைச்சருமான பீமன்னா காந்த்ரே(102) உடல் நலக்குறைவால் காலமானார். காங்கிரஸ் மூத்த தலைவரான இவர், கர்நாடகாவில் 4 முறை MLA, இருமுறை MLC ஆகவும் பதவி வகித்தார். 1992-ல் வீரப்ப மொய்லி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், கர்நாடக மாநில காங்கிரஸில் பல முக்கிய பொறுப்புகளிலும் இருந்துள்ளார். #RIP
News January 17, 2026
திமுக அரசு கொடுத்த பால்கோவா: செல்லூர் ராஜு

அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பால்கோவா கொடுத்து உள்ளது என செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேட்டியளித்த அவர், வரும் தேர்தலில் வாக்குகள் பெறுவதற்காக பொங்கலுக்கு திமுக அரசு பணம் கொடுத்துள்ளது என்றார். மேலும், போதை கலாசாரம் ஒழிய, சட்டம் ஒழுங்கு காக்கப்பட, விலைவாசி குறைய திமுக ஆட்சி விலக வேண்டும் என்பது கனவாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


