News April 16, 2025

தபால் நிலையங்களில் 1.79 லட்சம் பேர் ஆதார் திருத்தம்

image

கன்னியாகுமரி மாவட்டம் தபால் நிலையங்கள் மூலம் ஆதார் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது .மேலும் சிறப்பு ஆதார் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில், குமரி மாவட்ட தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவைகளை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 336 பேர் பெற்று பயனடைந்துள்ளதாக தபால் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர் பாஸ்போர்ட் சேவையினை 18,484 பேர் பெற்றுள்ளனர் என தெரிவித்தனர்.

Similar News

News November 3, 2025

குமரி: B.E போதும் வேலை ரெடி!

image

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: பொதுத்துறை

2. பணியிடங்கள்: 70

3. சம்பளம்: ரூ.40,000-2,20,000

4. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA

5. வயது வரம்பு: 18-45

6.கடைசி தேதி: 16.11.2025

7. <>ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK HERE<<>> .

8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 3, 2025

குமரி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) குமரி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News November 3, 2025

அருமனை அருகே நூதன முறையில் கடத்தல்

image

புலியூர்சாலை சோதனை சாவடியில் நேற்று அருமனை போலீசார் அவ்வழியாக வந்த மினி டெம்போவை சோதனை செய்தனர். அதில் மேல் பகுதியில் மரத்தூள் மூடைகள் அடுக்கப்பட்டு இருந்தன. போலீசார் அதன் கீழ் இருந்த மூடைகளை சோதனை செய்ய முயன்ற போது வாகனத்தில் இருந்த ஓட்டுநர், உடன் இருந்தோர் தப்பி சென்றனர். அதில் சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறையினரிடம் அரிசி, வாகனம் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!