News April 16, 2025
நேதாஜியின் நண்பர் காலமானார்

நேதாஜியின் நெருங்கிய நண்பரான நாகலாந்தை சேர்ந்த Poswuyi Swuro (106) நேற்று காலமானார். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் நாகலாந்து நோக்கி முன்னேறியபோது வழிகாட்டியாகவும், நேதாஜியின் மொழி பெயர்ப்பாளராகவும் Poswuyi Swuro செயல்பட்டார். நேதாஜியுடன் தொடர்பு கொண்டவர்களில் இவர் மட்டுமே உயிருடன் இருந்தார். நாகாலாந்தில் கிராம பஞ்சாயத்து தலைவராகவும், கிறிஸ்தவ தேவாலய பாஸ்டராகவும் இருந்துள்ளார். RIP.
Similar News
News January 19, 2026
26/26 – இந்த ஆண்டு குடியரசு தினத்தின் ஸ்பெஷல் தெரியுமா?

உங்க காலண்டரை திருப்பி, இந்த வருட குடியரசு தின தேதியை கவனியுங்கள். நீங்கள் ஒரு அதிசயத்தை பார்க்கலாம். 26/01/2026 – ஆண்டின் 26-வது நாள், 2000-த்திற்கு 26 ஆண்டுகள் கழித்து வரும் வருடம். இந்த அரிய நம்பர் கூட்டணியில் வருகிறது இந்த ஆண்டு குடியரசு தினம். வரலாறு எப்போதும் நிகழ்வுகளால் மட்டும் உருவாவதில்லை, சில நேரங்களில் இதுபோன்று எண்களும் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்து விடுகின்றன. SHARE IT.
News January 19, 2026
ஒரே படகில் வைப் செய்த நயன்-த்ரிஷா

கோலிவுட்டில் 20 ஆண்டுகளை கடந்த பின்னும் கோலோச்சும் நடிகைகளாக நயன் தாரா மற்றும் த்ரிஷா உள்ளனர். தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய படங்களிலும் இன்றும் கதாநாயகி அந்தஸ்துடன் வலம் வருகின்றனர். இந்நிலையில் இருவரும் நீண்ட நாள்களுக்கு பின் ஒரே நிற உடையில், கடலுக்கு நடுவே படகில் இருந்தபோது, கிளிக்கிய புகைப்படங்களை த்ரிஷா தனது x-ல் ’முஸ்தபா முஸ்தபா’ பாடலுடன் பதிவிட்டுள்ளார்.
News January 19, 2026
இவரல்லவா கலெக்டர்!

ஏழைகளுக்காக கலெக்டர் எடுத்த முடிவு வரவேற்பை பெற்றுள்ளது. ராஜஸ்தானின், ராஜஸ்மந்த் மாவட்ட கலெக்டர் அருண் குமார், மாவட்டத்தின் அனைத்து ஏழைகளுக்கும் ரேஷன், விதவைகளுக்கு ஓய்வூதியம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை கிடைக்கும் வரை சம்பளம் வாங்க மாட்டேன் என அறிவித்துள்ளார். ‘உத்தரவிட்டாச்சு வேலை முடிஞ்சுது’ என இல்லாமல், அதிகாரிகள் திட்டத்திற்கான பணிகளை விரைந்து முடிக்க இம்முடிவை எடுத்துள்ளாராம்.


