News April 4, 2024
சற்றுமுன்: வாட்ஸ் அப் முடங்கியது

உலக அளவில் வாட்ஸ் அப் சேவை முடங்கியுள்ளதாக பயனர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 30,000க்கும் மேற்பட்ட பயனர்கள் மெசேஜ்களை அனுப்ப முடியவில்லை, பெற முடியவில்லை மற்றும் செயலியை பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இதனை உறுதி செய்த வாட்ஸ் அப் நிறுவனம், “பிரச்னை சரி செய்யப்பட்டு, விரைவில் 100% சேவையை வழங்க பணியாற்றி வருகிறோம்” என தெரிவித்துள்ளது.
Similar News
News November 2, 2025
பயங்கரமான TOP 6 பேய் படங்கள் இதோ!

இப்போது வரும் பேய் படங்கள் பயப்படுற மாதிரியே இல்லை என சொல்பவரா நீங்கள்? உங்களுக்காகவே உலகளவில் நல்ல வரவேற்பை பெற்ற பேய் படங்களை பட்டியலிட்டிருக்கிறோம். போட்டோக்களை SWIPE செய்து அதனை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் பார்த்ததிலேயே பயங்கரமான பேய் படம் எது என கமெண்ட்ல சொல்லுங்க. உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணி பேய் படம் பார்க்க கூப்பிடுங்க.
News November 2, 2025
BREAKING: விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்

ரஞ்சி வீரர் ராஜேஷ் பனிக் (40), திரிபுராவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். U19 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர், 2002 முதல் திரிபுரா அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடி வந்தார். மேலும் , U-15 இந்திய அணியில் இர்பான் பதான் மற்றும் அம்பத்தி ராயுடு உடன் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். அவரின் திடீர் மறைவுக்கு ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News November 2, 2025
‘பூத் கமிட்டி ஆக்டிவேஷன்’ அதிமுக புது ரூட்டு!

அதிமுக IT விங் பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘பூத் கமிட்டி ஆக்டிவேஷன்’ பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இதில், ஒவ்வொரு பூத்துக்கும் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது. அவர்கள் வீடு வீடாக சென்று தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். மேலும், தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து விட்டனரா, ஓட்டு போட வரும் நபர் அந்த பகுதியை சேர்ந்தவர் தானா என்பதை ஆய்வு செய்யவார்களாம்.


