News April 4, 2024
தமிழகம் முழுவதும் 2,000 புகார்கள் பதிவு

தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதை படம் பிடித்து புகார் செய்வதற்கு, சி-விஜில் (cVIGIL) என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த மார்ச் 16ஆம் தேதியில் இருந்து, இந்த செயலி மூலம் பலர் புகார்களை அனுப்பி வருகின்றனர். இதுவரை 2,193 புகார்கள் இந்த செயலிக்கு வந்துள்ளன. அவற்றில் 1,694 புகார்களின் உண்மைத் தன்மை அறியப்பட்டு ஏற்கப்பட்டன. அதிகபட்சமாக கரூர்-372, சென்னை-209 புகார்கள் ஏற்கப்பட்டுள்ளன.
Similar News
News November 2, 2025
BREAKING: விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்

ரஞ்சி வீரர் ராஜேஷ் பனிக் (40), திரிபுராவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். U19 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர், 2002 முதல் திரிபுரா அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடி வந்தார். மேலும் , U-15 இந்திய அணியில் இர்பான் பதான் மற்றும் அம்பத்தி ராயுடு உடன் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். அவரின் திடீர் மறைவுக்கு ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News November 2, 2025
‘பூத் கமிட்டி ஆக்டிவேஷன்’ அதிமுக புது ரூட்டு!

அதிமுக IT விங் பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘பூத் கமிட்டி ஆக்டிவேஷன்’ பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இதில், ஒவ்வொரு பூத்துக்கும் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது. அவர்கள் வீடு வீடாக சென்று தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். மேலும், தேர்தல் சமயத்தில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து விட்டனரா, ஓட்டு போட வரும் நபர் அந்த பகுதியை சேர்ந்தவர் தானா என்பதை ஆய்வு செய்யவார்களாம்.
News November 2, 2025
அக்டோபரில் உச்சம் தொட்ட UPI பரிவர்த்தனை!

கடந்த அக்டோபரில் 2,070 கோடி UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ₹27.28 லட்சம் கோடியாம். NPCI தரவுப்படி, இது செப்டம்பர் மாதத்தை விட பரிவர்த்தனையில் 5%, பண மதிப்பில் 10% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் தினமும் சராசரியாக 66.8 கோடி பரிவர்த்தனைகளும், ₹88,000 கோடி பணமும் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. நீங்க UPI மூலம் எவ்வளவு செலவு செஞ்சீங்க?


