News April 16, 2025

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500: கீதா ஜீவன்

image

தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதேபோல், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ₹2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை ஒவ்வாெரு மாதமும் 5-ம் தேதி வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.

Similar News

News January 11, 2026

திமுக அரசை அப்புறப்படுத்த சபதம் எடுப்போம்: நிதின் நபின்

image

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் கலந்து கொண்டார். அப்போது லஞ்ச, லாவண்யம் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே மத்திய அரசின் கனவு என அவர் தெரிவித்தார். அதனால் திமுக அரசை இந்த மண்ணை விட்டு அகற்ற வேண்டும், இங்குள்ள அமைச்சர்கள், ஆன்மிகத்தை கொச்சைப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், திமுக அரசை அப்புறப்படுத்த அனைவரும் சபதம் எடுப்போம் என்றும் அழைப்பு விடுத்தார்.

News January 11, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 577 ▶குறள்: கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்.. ▶பொருள்:கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.

News January 11, 2026

இந்தியாவுக்கு பின்னடைவு.. பண்ட் விடுவிப்பு?

image

NZ-க்கு எதிரான ODI தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பயிற்சியின் போது வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிஷப் பண்ட் இந்த தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடைசியாக 2024 ஆகஸ்டில் நடந்த SL-க்கு எதிரான ODI தொடரில் விளையாடினார். இடைப்பட்ட காலத்தில் அணியில் இடம்பெற்றாலும், Playing 11-ல் இடம்பெறாமல் இருந்த நிலையில், தற்போதும் அந்த துரதிர்ஷ்டம் தொடர்கிறது.

error: Content is protected !!