News April 16, 2025
தென்காசி பயணிகளுக்கு குட் நியூஸ்

அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்ட பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறும் முறை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை பயன்படுத்தி QR கோடு ஸ்கேன் செய்தோ ( G-PAY, PHONE PAY) போன்ற பரிவர்த்தனை செய்தோ பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறலாம் என கூறியுள்ளனர். SHARE!
Similar News
News April 19, 2025
தென்காசியில் வேலை ரெடி

தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆக்கவுண்டன்ட்,கேஷியர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிப்ளமோ, டிகிரி படித்த 20 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு <
News April 19, 2025
முதியவரை அரிவாளால் வெட்டிய நான்கு பேர் கைது

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே கரிசல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி 62. இவரை வீடு தேடிச் சென்று நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பி ஓடினர். குற்றவாளிகள் பாலாஜி, பாலமுருகன், சுபாஷ், சந்தோஷ் ஆகிய நான்கு பேரை அச்சன்புதூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
News April 19, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.