News April 16, 2025
திண்டுக்கல்லில் ஆறு பவுன் செயின் பறிப்பு !

வேடசந்தூர் அருகே உள்ள ஜி.நடுப்பட்டி ஊராட்சி கேத்தம்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (55). இவர் நவாமரத்து பட்டியில் இருந்து கேத்தம்பட்டியை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆறு பவுன் நகையை அறுத்துக் கொண்டு பைக்கில் பறந்தனர். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 12, 2026
திண்டுக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

திண்டுக்கல்லில் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!
News February 12, 2026
திண்டுக்கல்: ரேஷன் கடை மீது புகாரா? இத பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி ஊழியர்கள் வாங்க சொல்வது (அல்லது) வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறைவாக உள்ளதா? உடனே 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) <
News February 12, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.12) வாகனம் ஓட்டும் போது பக்கவாட்டு கண்ணாடியை கவனித்து வாகனம் ஓட்டுவோம். விபத்தை தவிர்ப்போம்.. என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


