News April 16, 2025
மதுரையில் ஆட்டோமொபைல் நிறுவனர் கடத்தல்

மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தி வரும் சுந்தர் என்பவரை கடந்த 5 நாட்களுக்கு முன்பு தல்லாகுளம் பகுதியில் சிலர் கடத்தி சென்றதாக வந்த புகாரில் சுந்தரை மீட்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவரும் நிலையில் 5 பேரை பிடித்து விசாரணை. மேலும் 5 நாட்களாகியும் சுந்தரை மீட்க முடியாத நிலையில் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர். பணத்திற்காக கடத்தப்பட்டாரா? வேறு எதுவும் காரணமா என தீவிர விசாரணை.
Similar News
News October 30, 2025
திருமங்கலம்: ஆசிட் குடித்த பெண் பலி

திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள, பாண்டியன் நகரை சேர்ந்த டெய்லர் இளவரசன் மனைவி மாரீஸ்வரி வயது (58). உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவர், 2 நாட்களுக்கு முன்பு ஆசிட்டை குடித்துள்ளார். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் அக்டோபர் 28 நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த விபத்து குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 30, 2025
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (29.10.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News October 29, 2025
மதுரை: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

மதுரை மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கே கிளிக் செய்து தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் செலுத்தி விருப்பமான பெயரை மாற்றிகொள்ளலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க


