News April 16, 2025

சென்னைவாசிகளே குடையோடு போங்க…

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கும், ஈரோடு, சேலம், தர்மபுரி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 19, 2025

இந்த செய்தி உண்மையில்லை: அதிமுக மறுப்பு

image

நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் நீதிமன்றம் தலையீடு கூடாது; அப்படி தலையிட்டால் நீதி பரிபாலன சமன்பாடு குறைந்துவிடும் அபாயம் உண்டு என இபிஎஸ் பேசியதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அதிமுக இச்செய்தி முற்றிலும் போலியானது; அவதூறானது. சிறுபான்மையினருக்கும், நீதித் துறைக்கும் எதிரான கருத்தை இபிஎஸ் கூறியதாக திமுகவினரால் நியூஸ் பரப்பப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

News April 19, 2025

‘ரெட்ரோ’ ட்ரெய்லர் எப்படி இருக்கு?

image

கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘<>ரெட்ரோ<<>>’ படத்தின் ட்ரெய்லர், தமிழில் மட்டும் 8 மணி நேரத்தில் 3M views-களை கடந்துள்ளது. காதல், ஆக்‌ஷன், காமெடி என ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பல முகபாவனை காட்டி சூர்யாவும் மிரட்டி இருக்கிறார். ட்ரெய்லர் செம மாஸாக இருப்பதால், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. உங்களுக்கு பிடித்திருந்ததா?

News April 19, 2025

விரைவில் அமைச்சரவையில் மாற்றமா?

image

உளவுத்துறை ரிப்போர்ட்டை தொடர்ந்து அமைச்சர் <<16144954>>பொன்முடியை <<>>நேரில் அழைத்து கடிந்துக்கொண்ட ஸ்டாலின், நடவடிக்கைக்கு கட்டுப்படுங்கள் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரலாம் என பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல, தேர்தல் வரவுள்ளதால் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், திமுகவின் பேச்சாளர்கள் யாரும் தவறாக பேசக்கூடாது என்றும் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளாராம்.

error: Content is protected !!