News April 16, 2025

ராமநாதபுரத்தில் 12 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர்

Similar News

News February 13, 2026

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (பிப்.13) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News February 13, 2026

பரமக்குடி: பெண்ணிடம் 8 சவரன் நகை பறிப்பு!

image

பரமக்குடி அருகே அரியனேந்தல் போக்குவரத்து நகரை சேர்ந்த ஜெயபாரதி ரியல் எஸ்டேட் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் முன் அறிமுகம் இல்லாத இருவர் 2 நாட்களாக நிலம் வாங்குவது குறித்து போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு வந்து நிலம் வாங்குவது தொடர்பாக பேசி அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகை திருடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 13, 2026

ராமநாதபுரம்: உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply!

image

ராம்நாடு மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிய SHARE பண்ணுங்க!

error: Content is protected !!