News April 16, 2025

தனிக் கட்சி தொடங்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி?

image

பிஎஸ்பி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி புதிய கட்சியை தொடங்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு பிஎஸ்பி மாநிலத் தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். அவருடன் நிலவிய கருத்து வேறுபாடால் கட்சியிலிருந்து பொற்கொடி நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஆம்ஸ்ட்ராங் மக்கள் கட்சி என்ற பெயரில் புது கட்சி தொடங்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.

Similar News

News January 20, 2026

யார் இந்த நிதின் நபின்?

image

பாஜகவின் தேசியத் தலைவராக 45 வயதான நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிஹார் மாநிலத்தை சேர்ந்த நிதின் நபின், பாஜக தலைவராக இருந்த நவீன் கிஷோர் பிரசாத் சின்காவின் மகன். தந்தையின் மறைவுக்கு பிறகு அவர் பிஹாரில் 5 முறை MLA-வாக வெற்றி கண்டார். இளம் வயதிலேயே பாஜக தேசிய தலைவரானவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

News January 20, 2026

ராசி பலன்கள் (20.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News January 20, 2026

காங்கிரஸ் MLA-க்களுக்கு ஷாக் கொடுத்த ராகுல்

image

TN காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 2026 தேர்தல் தொடர்பாக ராகுல் நடத்திய ஆலோசனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல MLA-க்கள் தங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறியுள்ளனர். அப்போது ராகுல் தன்னிடமிருந்த ரகசிய சர்வேவை காட்டி MLA-க்கள் மீதான புகார்கள், 70% பேர் மீண்டும் போட்டியிட்டால் வெற்றிபெறும் வாய்ப்பு பற்றி சுட்டிக்காட்டினாராம். இதைக்கேட்டு அவர்கள் அதிர்ந்து போனதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!