News April 16, 2025
பள்ளியில் கேமரா, கணினி பாகங்கள் திருட்டு

செங்கம் அருகே காயம்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி 3 நாட்கள் விடுமுறைக்குப் பின் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது பள்ளியின் ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, கண்காணிப்புக் கேமரா மற்றும் கணினி உதிரி பாகங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. தலைமை ஆசிரியர் ரகுபதி புகார் அளித்ததையடுத்து, செங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வி பயிலும் இடத்திலும் கைவரிசையா?
Similar News
News February 12, 2026
ஆட்சியர் அலுவலகதில் 2030 என் ஊர் என் கனவு’திட்டம்

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விஷன் 2030 ‘என் ஊர் என் கனவு’ திட்டத்தின் கீழ் கருத்து கேட்பு கூட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகி எ.வ.வே.கம்பன், செங்கம் எம்எல்ஏ கிரி, மேயர் நிர்மலா வேல்மாறன், கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News February 12, 2026
தி.மலை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை!

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 12, 2026
தி.மலை: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.


