News April 3, 2024

IPL: கொல்கத்தா அணி அபார வெற்றி

image

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான 15ஆவது ஐபிஎல் போட்டியில், 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, தொடக்கம் முதலே தடுமாறி வந்ததது. இதனால் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தோல்வியை தழுவியது. அபாரமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி மற்றும் வைபவ், தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

Similar News

News November 10, 2025

மற்றொரு திமுக தலைவரின் பதவி பறிப்பு

image

சங்கரன்கோவில், <<18079595>>திட்டக்குடி<<>> வரிசையில் கிருஷ்ணகிரி நகராட்சியின் சேர்மனும் பதவியை இழந்துள்ளார். திமுகவை சேர்ந்த பரிதா நவாப்புக்கு எதிராக சொந்த கட்சியின் கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. திமுகவில், பல இடங்களில் உள்கட்சி பூசல் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் அடுத்தடுத்த பதவியிழப்பு சம்பவங்கள் தலைமைக்கு தலைவலியை கொடுத்துள்ளன.

News November 10, 2025

வடசென்னை பார்த்து வருந்தினேன்: நடிகர் கிஷோர்

image

நடிக்கும்போது தான் கண்டு வியந்த காட்சிகள் எதுவும் ‘வடசென்னை’ படத்தில் இடம்பெறாததால் வருத்தப்பட்டதாக நடிகர் கிஷோர் தெரிவித்துள்ளார். ஆனால், ‘அரசன்’ படத்தில் வடசென்னையின் செந்திலாக இடம்பெற விரும்புவதாகவும், வெற்றிமாறனின் அழைப்புக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வடசென்னை 1-ல் சேர்க்கப்படாத Footage-களை வெற்றிமாறன் ரிலீஸ் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

News November 10, 2025

விவசாயத்தில் நல்ல லாபம் பார்க்கணுமா? இதோ வழி!

image

பயிர்களை இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக விற்பனை செய்ய இ-நாம் (e-NAM) அரசு செயலி உதவுகிறது. இதன்மூலம் லாபம் முழுவதும் விவசாயிகளுக்கே செல்லும். இதற்கு இச்செயலியில் நீங்கள் அறுவடை செய்த பயிரின் தகவலை உள்ளிடவேண்டும். ஒருவேளை நீங்கள் விவசாயி இல்லையெனில், செயலியில் வர்த்தகராக பதிவு செய்யலாம். விவசாயிகளிடமிருந்து பயிர்களை வாங்கி, அதை உணவு நிறுவனங்கள்/ சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கலாம். SHARE.

error: Content is protected !!