News April 16, 2025

இனி போன் ரிங்டோனுக்கும் காசு கேப்பாரு போலயே!

image

நேற்று GBU படக்குழுவிடம் ₹5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இளையராஜா. ரஜினி படத்துக்கே நோட்டீஸ் அனுப்பியவர், அஜித் படத்துக்கு கேட்க மாட்டாரா என்ன? X ட்ரெண்டிங் இதுதான். கன்டென்ட் கிடைக்காமல் இருந்த நெட்டிசன்கள், மீம்ஸை போட்டு வைரலாகி வருகின்றனர். ஒருவேள அவர், இனி நம்ம போன்’ல ரிங்டோன் வெக்குறதுக்கும் காசு கேட்பாரு போலயே! நீங்க பாத்த காமெடியான மீம்ஸ் எது?

Similar News

News January 24, 2026

வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதன் நன்மைகள்

image

காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவது குறையும்.*இதயம், தலைமுடி, சருமம், வயிறு போன்றவற்றிற்கு நன்மை. *செரிமானம் மேம்படும். *சருமம் பொலிவு பெறும். *நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். *ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். *அதிகளவில் இல்லாமல் அளவுடன் சாப்பிடுவது நல்லது.

News January 24, 2026

நாடாளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர்

image

சனே டகாய்ச்சி, ஜப்பான் பிரதமராக பதவியேற்ற 3 மாதங்களில் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்கு குறைந்த பெரும்பான்மை உள்ளதால், ஆளுங்கட்சியின் பலத்தை நிரூபிக்க இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ஜப்பானின் முதல் பெண் பிரதமரான இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

News January 24, 2026

அரசியலா.. நானா.. பதிலளித்த நடிகை

image

நடிகை பாவனா கேரள சட்டமன்ற தேர்தலில் சிபிஐ(எம்) வேட்பாளராக களமிறங்குவதாக SM-ல் தகவல்கள் தீயாய் பரவின. இதுகுறித்து பேசிய அவர், இது முற்றிலும் பொய்யான செய்தி எனவும் தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளியும் இல்லாதபோது, இதுபோன்ற வதந்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை எனவும் கூறினார். மேலும், இந்த செய்தியை பார்த்து நான் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை என்றார்.

error: Content is protected !!