News April 16, 2025
வாழ்வாதார உறுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள் 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதிச் சான்றிதழை வரும் மே 2 முதல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சான்றிதழைகருவூலகத்திற்கு நேரில் வந்தோ (அ) தபால் அலுவலக சேவையை பயன்படுத்துவதன் வாயிலாகவோ பதிவு செய்யலாம். 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வுறுதிச் சான்றிதழை 30.05.2025க்குள் சமர்ப்பிக்கத் தவறினால் மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது என DAT இயக்குனர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 25, 2025
காரைக்கால் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அறிவிப்பு

காரைக்காலில் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் 7.00 மணி வரையும் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பணிக்கு சென்று திரும்பும் பொதுமக்களால் சாலைகள் போக்குவரத்து நிறைந்து காணப்படும் என்பதால் சாலைகளில் கல், மண், நிலக்கரி மற்றும் இதர லோடு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மேற்கண்ட நேரத்தில் வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 25, 2025
புதுச்சேரி: நிவாரண உதவி பெற சேவை துவக்கம்

புதுச்சேரி பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய தகவல் மையம் இணைந்து, இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவிக்கு, உடனுக்குடன் விண்ணப்பிக்க ஏதுவாக பேரிடர் நிவாரண உதவி சேவை என்ற இணைய வழி சேவை துவங்கப்பட்டுள்ளது. பி.எஸ்.டி.எம்.ஏ இணையதளமானது (www. pad-ma.py.gov.in) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பேரிடர் நிவாரண உதவி சேவைக்கு விண்ணப்பிக்கலாம்.
News December 25, 2025
புதுச்சேரி: புத்தாண்டு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற கிறிஸ்துமஸ் மற்றும் 2026-புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம், இன்று ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புதுறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


