News April 16, 2025
சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட
உள்ளது. நீர் பாதுகாப்பில் செயல்படுபவர்களின் விவரங்கள் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையத்திற்கு அனுப்புமாறு என்றார்
Similar News
News August 14, 2025
கோவை மாநகராட்சியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (14.08.2025) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற உள்ள இடங்கள் குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 1.கிழக்கு மண்டலம் வார்டு எண் 5, இடம் -பங்காரு திருமண மண்டபம், 2.மேற்கு மேற்கு மண்டலம் (வார்டு எண் 17 & 33) இடம் -சுஹிதா மஹால் திருமண மண்டபம், டி.வி.எஸ் நகர் கவுண்டம்பாளையம்.
News August 13, 2025
17 வயது பள்ளி மாணவி கர்ப்பம்: கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

கோவை: காரமடைப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இங்கு அவரது உறவினரான 17 வயது மாணவனும் படித்து வருகிறார். இந்தநிலையில் இருவரும் நெருங்கிப் பழகியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி 6 மாத கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 13, 2025
கோவையில் பாலியல் தொழில்: இருவர் கைது

கோவை மாநகர் பகுதியில் தொடர் குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநக காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் இன்று பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ராம் நகரில் உள்ள பிரகாஷ் லாட்ஜில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குணசீலன் (51). உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி (34). ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.