News April 16, 2025
பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த ஜோதிடர்கள் கைது

சிங்காரப்பேட்டை அடுத்த தளபதி நகர் சேர்ந்த சரிதா. இவரிடம் உங்களுக்கு நேரம் சரியில்லை என்று கூறி காரில் வந்த 2 ஜோதிடர்கள் அவர் காதில் அணிந்திருந்த நகை மற்றும் 5000 பணத்தை வைத்து பரிகாரம் செய்வதாக கூறி நகை பணத்துடன் தப்பி ஓடினர். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டம் செங்க்குட்டை பகுதியை சார்ந்த சரண், ஜீவா ஆகிய இருவரையும் கைது செய்தனர். பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
Similar News
News January 12, 2026
கிருஷ்ணகிரியில் சமுதாய வளைகாப்பு விழா

கிருஷ்ணகிரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மத நல்லிணக்கத்தை நிலை நாட்டும் வகையில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று (ஜன.11) நடைபெற்றது. தேன்கனிக்-கோட்டை சப்தகிரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
News January 12, 2026
கிருஷ்ணகிரி: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

கிருஷ்ணகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 12, 2026
கிருஷ்ணகிரி: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.


