News April 16, 2025
உலகின் முதல் விந்தணு ரேஸ் பார்க்க ரெடியா?

கார், பைக் ரேஸ் பார்த்திருப்போம். இதென்ன புதுசா இருக்கேன்னுதான யோசிக்கிறீங்க. ஏப். 25-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது. மைக்ரோஸ்கோப்பில் 2 விந்தணு மாதிரிகளை வைத்து நடைபெறும் இந்த ரேஸ், நவீன கேமராவில் படம்பிடிக்கப்பட்டு லைவ் கமெண்ட்ரி செய்யப்படுமாம். ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி.
Similar News
News November 6, 2025
டாப் 10 அசுத்தமான நகரங்கள்.. தமிழ்நாடு நம்பர் 1

இந்தியாவில் நகர்ப்புற தூய்மை குறித்த சமீபத்திய கணக்கெடுப்பு, ஸ்வச் பாரத் மிஷன் ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கழிவுகளை நிர்வகிப்பதில், சிறிய நகரங்களை விட பெருநகரங்கள் மோசமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரம் நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE IT.
News November 6, 2025
ராகுலுக்கு, பிரஷாந்த் கிஷோர் ஆதரவு

பிஹார் தேர்தலில், காங்கிரஸும், ஜன் சுராஜ் கட்சியும் எதிரெதிராக களம் காண்கின்றன. இந்நிலையில், ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுக்கு, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்துள்ளார். ECI-க்கு எதிராக ராகுல் எழுப்பும் கேள்விகள் நியாயமானவை என்ற அவர், வாக்குத் திருட்டு பிஹார் தேர்தல் முடிவை மாற்றலாம் என்ற ராகுலின் அச்சத்தை ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
News November 6, 2025
பணம் பறிப்பதுதான் ஜாய் கிரிசில்டாவின் நோக்கம்: ஸ்ருதி

பணம் பறிப்பதும், எங்களை பிரிப்பதும் தான் ஜாய் கிரிசில்டாவின் நோக்கம் என மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி பிரியா தெரிவித்துள்ளார். தனக்கு ஒரு வீடு, மாதம் ₹8 லட்சம் வேண்டும் என ஜாய் கிரிசில்டா கேட்பதாகவும், ஊடகங்களை தனிப்பட்ட பொருளாதார லாபத்திற்காக பயன்படுத்துவதாகவும் ஸ்ருதி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கணவருடன் உறுதியாக நிற்கிறேன், அவரை இறுதி வரை காப்பாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.


