News April 16, 2025
இளம்பெண்ணை ஏமாற்றியவர் கைது

காஞ்சிபுரம், உத்திரமேரூரை சேர்ந்த பாலாஜி என்பவர், ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் செய்யாறைச் சேர்ந்த பெண் பணிபுரிந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பாலாஜிக்கு ஏற்கனவே திருமணமானதை அறிந்த அந்த பெண் காதலை கைவிட்டுள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணத்தை பாலாஜி நிறுத்திய நிலையில், பெண் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.
Similar News
News August 13, 2025
தி.மலை மக்களே.. இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

நம்ம தி.மலை மாவட்டத்தை பற்றி தெரிஞ்சுக்கலாமா
நகராட்சி- (3)
மாநகராட்சி- (1)
பேரூராட்சிகள்- (10)
வருவாய் கோட்டம்- (3)
தாலுகா- (12)
வருவாய் வட்டங்கள் – (12)
வருவாய் கிராமங்கள்- (1067)
ஊராட்சி ஒன்றியம்- (18)
கிராம பஞ்சாயத்து- (860)
MP தொகுதி- (2)
MLA தொகுதி- (8)
மொத்த பரப்பளவு – 6,188 ச.கி.மீ
மக்கள் தொகை-24,64,875
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News August 13, 2025
தி.மலை மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, ஆரணி, வெம்பாக்கம் ஆகிய இடங்களில் இன்று(ஆக.13) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இடங்களின் முகவரி விவரங்களை மேலே உள்ள படத்தில் காணலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம், ரேஷன் அட்டை, ஆதார் திருத்தும் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் எங்கும் அலையாமல் ஒரே இடத்தில மனுவாக அளித்து பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News August 13, 2025
தி.மலை மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாரத்தில் கரியமங்கலம் விபிஆர்சி கட்டடம், கலசப்பாக்கம் வட்டாரத்தில் ஆனைவாடி சமுதாய கூடம், சேத்துப்பட்டு வட்டாரத்தில் கேபிகே மஹால், ஆரணி வட்டாரத்தில் எம்ஆர்ஆர் மண்டபம், வெம்பாக்கம் வட்டாரத்தில் நாட்டேரி விபிஆர்சி கட்டடம் மற்றும் புதுப்பாளையம் கஜலஷ்மி மண்டபம் ஆகிய இடங்களில் இன்று(ஆக.13) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.