News April 16, 2025
ஆன்லைன் முதலீடு – ரூபாய் 11 லட்சம் மோசடி

வில்லியனூரை சேர்ந்த இஸ்மத் நாச்சியார் என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி இஸ்மத் ட பல்வேறு தவணைகளாக ரூ.11,42,736 முதலீடு செய்து, அவருக்கு கொடுத்த பணிகளை செய்து முடித்து ஏமாந்தார் அவர் இன்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்
Similar News
News November 14, 2025
புதுவை: பெற்றோர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

புதுவையில் போக்குவரத்து போலீசார் நேற்று கொசக்கடை தெரு, நேரு வீதிகளில் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்த 5 சிறுவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல், மதுபோதையில் வாகனங்கள் ஓட்டி வந்தவர்கள் என 250 பேருக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.
News November 14, 2025
BREAKING: புதுச்சேரியில் நாளை விடுமுறை

புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்தியில், “நாளை (நவ.15) தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி (டெட்) தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியைச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள் எழுத உள்ளனர். அதனால், நாளை விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனையேற்று, நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
புதுவை: வாகன பேன்சி எண்கள் ஆன்லைனில் ஏலம்!

புதுவை போக்குவரத்து துறையின் PY-01 DF வரிசையில் உள்ள எண்கள் https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் நவ.19 காலை 11 மணி முதல் மாலை 4:30 வரை ஏலம் விட உள்ளது. இந்த ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர் மற்றும் https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் ‘நியூ பப்ளிக் யூசர்’ மூலமாக நவ.18 வரை பதிவு செய்துகொள்ளலாம் என போக்குவரத்து ஆணையர் சிவகுமார் தெரிவித்தார்.


