News April 16, 2025

GPAY-இல் AUTO PAY வசதி தெரியுமா?

image

தொலைபேசி பில் , EB பில், இன்ஷூரன்ஸ் பில் என மாதாந்திர கட்டணங்களை நேரில் அல்லது இணையத்தில் கட்ட அதிக நேரம் எடுக்கும். ஆனால், GPAY மூலம் மிக எளிதாக கட்டணங்களை செலுத்தலாம். இதற்கு GPAY-ல் செட்டிங்ஸில், சில மாற்றங்களை செய்தாலே போதும். அதன்பின், அந்தந்த தேதியில் GPAY-ல் இருந்து பணம் தானாக எடுக்கப்பட்டு, கட்டணம் செலுத்தப்பட்டு விடும். இந்த வசதி தேவையில்லை எனில், செட்டிங்ஸில் மாற்றம் செய்து நீக்கலாம்.

Similar News

News February 2, 2026

வேலூர்: ஓடும் பஸ்சில் விஷம் குடித்த ஜோடி!

image

வாலாஜாவில் ஜனவரி 31-ஆம் தேதி, பஸ்சில் ஒரு ஆணும் பெண்ணும் மயங்கிய நிலையில் இருந்தனர். இது பற்றி வாலாஜா போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் குடியாத்தத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திருமணத்தை மீறிய உறவில் இருந்ததும் தெரிந்தது. இது பற்றி ஆட்டோ டிரைவரின் மனைவி ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

News February 2, 2026

DCM சுனேத்ரா பவார் மீது ₹25,000 கோடி மோசடி புகார்

image

சுனேத்ரா பவார் மீதான ₹25,000 கோடி மோசடி புகாரே சரத் பவார், அஜித் பவார் அணியை மீண்டும் ஒன்று சேராமல் தடுத்து சுனேத்ராவை மீண்டும் NDA கூட்டணியில் இணைத்துள்ளதாம். 2002 – 2017 காலகட்டத்தில் MSCB வங்கியில் போலியான ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாக அவர் மீதான மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு(EOW) போலீசார் அவரை விடுவித்தாலும், ED வழக்கை தூசித்தட்டி விசாரணை நடத்தி வருகிறது.

News February 2, 2026

டிமாண்டை ஏற்றிக்கொண்டே போகிறதா காங்கிரஸ்?

image

திமுகவிடம் வரும் தேர்தலுக்கு மட்டுமல்லாமல், 2029 தேர்தலுக்கும் சேர்த்து ராகுல் டீல் பேசியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, கொள்கைகளை செயல் வடிவம் ஆக்க அதிகாரத்தில் பங்கு முக்கியம் என்ற அவர், இப்போதே லோக்சபா தேர்தலுக்கு 15 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என உத்தரவாதம் கேட்கிறாராம். இதனால் திமுக சற்று டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!