News April 16, 2025

வான்கடே மைதானத்தில் ஜொலிக்கும் ரோகித் பெயர்

image

ரோகித் சர்மாவை கவுரவிக்க மும்பை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. ஆம்! வான்கடே மைதானத்தில் ஒரு கேலரி-க்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் பெயரை வைக்க, மும்பை கிரிக்கெட் சங்க ஆண்டு பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் முன்னாள் BCCI தலைவர் சரத் பவார் மற்றும் பேட்டிங் ஜாம்பவான் அஜித் வடேகர் ஆகியோரின் நினைவாக மேலும் இரண்டு கேலரிகளுக்கு பெயரிடப்படும் என்றும் MCA உறுதிப்படுத்தியுள்ளது.

Similar News

News November 6, 2025

சற்றுமுன்: விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி.. புதிய PHOTO

image

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பெரும் மக்கள் கூட்டம் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் அரசியல் படமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் அதனை மெய்ப்பிக்கும் வகையில் போஸ்டர் அமைந்துள்ளது. ஜனவரி 9-ம் தேதி ‘ஜனநாயகன்’ வெளியாக உள்ள நிலையில் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்து படக்குழு உற்சாகப்படுத்தியுள்ளது.

News November 6, 2025

கோடநாடு பங்களாவுக்குள் ஆள்களை அனுப்பிய EPS: டிடிவி

image

அதிமுக அமைச்சர்கள், MLA-க்கள் செய்த லீலா வினோதங்கள் பற்றிய கோப்புகள் கோடநாடு பங்களாவில் இருந்ததாக தினகரன் கூறியுள்ளார். உளவுத்துறை அளித்த கோப்புகளை பச்சை ஃபைலில் ஜெ., வைத்திருந்ததாக கூறிய அவர், யாரையும் பிளாக்மெயில் செய்யும் எண்ணம் இல்லை என்பதால் ஜெ., மறைவுக்கு பின் அதை எரித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், பங்களாவுக்குள் ஆள்களை அனுப்பி அந்த ஃபைலை EPS தேடியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News November 6, 2025

சீனாவில் 10 நாள்களில் 2-வது நிலநடுக்கம்

image

சீனாவின் வடமேற்கில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 220 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில், உயிர்சேதம் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த அக்.26-ல், 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இது 10 நாள்களில் உருவாகியுள்ள 2-வது நிலநடுக்கம்.

error: Content is protected !!