News April 16, 2025
அடுத்த 3 நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு உள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்ச வெப்பநிலையாக 36 – 37 டிகிரி செல்சியஸ் இருக்கும். அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, மக்கள் அதிக அளவு தண்ணீர், மோர் போன்றவற்றை குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 16, 2025
கூலி படத்துக்கு புது வைப் கொடுத்த பூஜா ஹெக்டே

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிஸியாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் ‘ரெட்ரோ’, ‘ஜனநாயகன்’ என அடுத்தடுத்து படங்களை கையில் வைத்துள்ள அவர் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதுகுறித்து பேசியவர் ரஜினி சாருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் ஸ்பெஷல் என தெரிவித்துள்ளார். கூலி படத்தில் தான் ஆடிய நடனம் ‘காவாலா’ போன்று இல்லாமல் வேறு வைப்பில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
News April 16, 2025
திமுக ஆட்சியை அகற்றுவதே தீர்வு: சீமான்

திமுக ஆட்சியில் சாதிய மோதல்களும், கொலைவெறித் தாக்குதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறும் கூடாரமாக பள்ளிக்கூடங்கள் மாறியுள்ளதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். சட்ட – ஒழுங்கு சீர்கெட்டு நிற்பதற்கான சான்றுதான் பாளையங்கோட்டை பள்ளியின் கொலைவெறித் தாக்குதல் என்றும் அவர் கூறியுள்ளார். திமுக ஆட்சியை அகற்றுவதே இதற்கு ஒரே தீர்வு எனவும் சீமான் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
News April 16, 2025
பாஜக தலைவர் பொறுப்பேற்பு

தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா, வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சிக் கொடியேற்றி நயினார் நாகேந்திரன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.