News April 16, 2025

தமன்னா vs ஊர்வசி: குத்தாட்டம் போடுவதில் யார் கெத்து?

image

ஊர்வசி ரவுத்தேலா குத்தாட்டம் போட்ட ‘ஜாட்’ படத்தின் ‘சாரி போல்’ பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அதேபோல், ‘ரெய்டு 2’ படத்தில் ‘நாஷா’ பாடலில் தமன்னா குத்தாட்டம் போட்ட வீடியோ 21 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதனிடையே ரசிகர் ஒருவர் ‘நாஷா’ பாடலை விட ஊர்வசியின் பாடலே நன்றாக இருப்பதாக கமெண்ட் செய்ய, அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஊர்வசி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உடனே நீக்கியுள்ளார்.

Similar News

News January 26, 2026

திருமாவளவன் முக்கிய ஆலோசனை!

image

விசிக மண்டலப் பொறுப்பாளர்கள் கூட்டம் திருமாவளவன் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில், தேர்தல் பணிகள், கூட்டணி, தொகுதிகள் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன. குறிப்பாக பாமக(ராமதாஸ்) திமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், தங்களது நிர்வாகிகளின் கருத்துகளை திருமாவளவன் தனித் தனியாக சந்தித்தும் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 26, 2026

பன்முகத்தன்மையே நமது பலம்: CM ஸ்டாலின்

image

77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில், நமது பலம் என்பது ஒற்றைத்தன்மை அல்ல பன்முகத்தன்மையே என்றும், அந்த பன்முகத்தன்மை காக்கப்படுவதே இந்தியாவை காக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், சுயமரியாதை உணர்வுடன், நம்பிக்கையுடன், சுதந்திரத்துடன் வாழும் போது ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருசேர உயர்கிறது என்று கூறியுள்ளார்.

News January 26, 2026

‘ஜன நாயகன்’ H.வினோத்திற்கு விஜய் போட்ட ORDER!

image

‘ஜன நாயகன்’ மேல்முறையீட்டு வழக்கில் ஜன.27-ல் சென்னை HC தீர்ப்பு அளிக்கவுள்ளது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய அரசியல் வசனங்களை நீக்க வேண்டாம் என H.வினோத்திடம் விஜய் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவற்றை நீக்கினால் படத்தின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் என விஜய் கருதுவதாக கூறப்படுகிறது. அதேபோல, அந்த வசனங்கள் தனது அரசியல் பயணத்திற்கு பயன்படும் என விஜய் நம்புகிறாராம்.

error: Content is protected !!