News April 16, 2025
திலகபாமா, வடிவேல் ராவணன் சமரசம்

அன்புமணியை பாஜக தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியது ஜனநாயக படுகொலை என்று திலகபாமா கடுமையாக விமர்சித்தார். இதனால், ஆத்திரமடைந்த வடிவேல் ராவணன், பாமகவில் இருந்து திலகபாமா வெளியேற வேண்டும் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார். இது பாமகவில் உள்கட்சி மோதலுக்கு மேலும் வழிவகுத்தது. இந்நிலையில் இருவரையும், தனது இல்லத்திற்கு அழைத்து அன்புமணி சமரசம் செய்து வைத்து, மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
Similar News
News April 19, 2025
புதுமைப் பெண் திட்டம்: 4.95 லட்சம் மாணவிகள் பயன்

புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக ரூ.721 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் 4,95,000 மாணவிகள் பயனடைந்து உள்ளதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது. அதேபாேல், தமிழ் புதல்வன் திட்டத்தில் 3.80 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
News April 19, 2025
ராசி பலன்கள் (19.04.2025)

➤மேஷம் – ஆதாயம் ➤ரிஷபம் – சாந்தம் ➤மிதுனம் – வரவு ➤கடகம் – வெற்றி ➤சிம்மம் – சுபம் ➤கன்னி – லாபம் ➤துலாம் – நலம் ➤விருச்சிகம் – இரக்கம் ➤தனுசு – சுகம் ➤மகரம் – அமைதி ➤கும்பம் – உதவி ➤மீனம் – பயம்.
News April 19, 2025
909 வீரர்களின் சடலங்களை ஒப்படைத்த ரஷ்யா: உக்ரைன்

909 வீரர்களின் சடலங்களை ரஷ்யா ஒப்படைத்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியானபோதும் போர் முடிவுக்கு வரவில்லை. அண்மையில் இருதரப்பும் வீரர்கள் சடலங்களை பரிமாறியபோது 909 வீரர்கள் சடலங்களை ரஷ்யா அளித்ததாகவும், தங்கள் தரப்பு 43 சடலங்களை ஒப்படைத்ததாகவும் உக்ரைன் கூறியுள்ளது.