News April 16, 2025
கேப்டன்சியில் அசத்தும் ஷ்ரேயஸ்

கடந்த ஐபிஎல் சீசனில் KKR அணிக்கு கோப்பை வென்று கொடுத்த ஷ்ரேயஸ் ஐயர், நடப்பு ஆண்டு பஞ்சாப்பை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார். குறிப்பாக, இன்றைய த்ரில் போட்டியில் ஷ்ரேயசின் கேப்டன்சி முடிவுகள் பாராட்டுகளை பெறுகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது, பவுலர்களை கச்சிதமாக பயன்படுத்தியது, குறைவான ரன்கள் என்றாலும் வெற்றிகரமாக defend செய்தது என்று அவர் கலக்கியிருக்கிறார்.
Similar News
News April 21, 2025
வெயில் கொளுத்தும்.. வெளியே வராதீர்

அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என IMD எச்சரித்துள்ளது. வட தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும். எனவே, மதியம் 11 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகளவில் தண்ணீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்.
News April 21, 2025
கூட்டணிக்கு ‘நோ’ சொன்ன முதல்வர்.. பாமக திட்டம் என்ன?

திமுக கூட்டணியில் பாமக இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுக கூட்டணியில் தற்போதைய நிலையே தொடரும் என்று விளக்கியுள்ளதன் மூலம் புதியவர்களுக்கு இடமில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதனால் பாமக, அதிமுக கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
News April 21, 2025
கனமழை..நிலச்சரிவு.. உருக்குலைந்த ரம்பன்!

ஜம்மு – காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால், பல கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மழை விடாமல் பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நீடிக்கும் என்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.