News April 16, 2025
EMMY விருது வென்ற நடிகை காலமானார்

EMMY விருது வென்ற பிரிட்டன் நடிகை ஜீன் மார்ஸ் (90) காலமானார். 1970களில் வெளியான அப்ஸ்டேர்ஸ், டவுன்ஸ்டேர்ஸ் சீரிஸ் மூலம் பிரபலமானவர் ஜீன்ஸ் மார்ஸ். லண்டனில் வசித்த அவர் ஞாபக மறதி நோயால் ஏற்பட்ட பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். ஈகிள் ஹேஸ் லேண்டட், ஹவுஸ் ஆப் எலியட் உள்ளிட்ட பல சீரிஸ்களில் நடித்துள்ள அவருக்கு, 1975இல் EMMY விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 23, 2025
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: உ.பி.யில் HIGH ALERT

ஜம்மு காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து உ.பி.யில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அயோத்தி, காசி, மதுரா போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்கள், தாஜ்மஹால் போன்ற சுற்றுலா தலங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அம்மாநில டிஜிபி பிரஷாந்த் குமார் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பஸ், ரயில் நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், வெளிநாட்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
News April 23, 2025
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி முன்னாள் துவக்க ஆட்டக்காரர் Keith Stackpole (84) காலமானார். 1966- 1974 வரை ஆஸ்திரேலிய அணிக்காக அவர் விளையாடியுள்ளார். மொத்தம் 7 சதங்கள் உள்பட 2,807 ரன்கள் குவித்துள்ளார். கடைசியாக நியூசி.க்கு எதிராக 1974-ம் ஆண்டில் டெஸ்டில் விளையாடினார். பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், டிவி கமெண்டேட்டராகவும், பத்திரிகையில் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.
News April 23, 2025
லாக்-இன் பண்ணாமல் இனி வரித்தாக்கல் செய்யலாம்

பயனர் ஐடி, கடவுச்சொல் இல்லாமல் இனி எளிதாக வரித்தாக்கல் செய்யலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது. இதன்படி, அதிகாரப்பூர்வ e-filing இணையதளத்தில் உள்ள ‘e-Pay Tax’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, பான் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் உள்ளிட்டு வரித்தாக்கல் செய்யலாம் எனவும், இதனால் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை என CBDT விளக்கம் அளித்துள்ளது.