News April 15, 2025
திருக்குவளைக்கு 16ஆம் தேதி ஆட்சியர் விசிட்

திருக்குவளை வட்டத்தில் 16.4.2025 அன்று உங்கள் ஊரில் உங்கள் முதல்வர் திட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை திருக்குவளைக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வருகை தருகிறார். அப்போது திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் அவரை சந்தித்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுத்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 17, 2025
நாகை: இணையதளத்தின் மூலம் உரிமம் பெறலாம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்து வகை கனிமங்களையும் குவாரியிலிருந்து எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும் நடை சீட்டு உரிமம் வழங்கப்படுகிறது. தற்போது இணைய வழி வாயிலாக வழங்கும் நடைமுறை ஏப். 28ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே https://mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக குவாரி குத்தகைதாரர்கள் விண்ணப்பித்து நடை சீட்டு உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்கள்.
News April 17, 2025
நாகப்பட்டினம்: ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய <
News April 17, 2025
நாகை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய காவிரிப் படுகை மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை வாய்ப்பு உள்ளதென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வெளியில் செல்லும் போது குடையை எடுத்துச் செல்லுங்கள். மற்றவர்களுக்கும் இந்தத் தகவலை ஷேர் பண்ணுங்க.. உங்க ஏரியா ல மழை பெய்யுதா?