News April 15, 2025
சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஏப்ரல்15 ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
Similar News
News February 18, 2026
BREAKING: சேலத்தில் இளம்பெண் தற்கொலை

சேலத்தைச் சேர்ந்த சண்முகபிரியா என்பவர், கௌதம் என்பவரை காதலித்து வந்தார். பின், கௌதமின் நடத்தை சரியில்லாத காரணத்தால் சண்முகபிரியா அவருடன் பழகுவதை துண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கௌதம், தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த சண்முகபிரியா கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
News February 18, 2026
சேலம் அருகே விபத்து

சேலம் அருகே வீராணம் அடுத்த குப்பனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த டூவீலர் அவர் மீது மோதியது. அப்பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News February 18, 2026
RRB JOB: அறிவித்தார் சேலம் கலெக்டர்

RRB அறிவித்துள்ள 22,195 குரூப்-D காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க<


