News April 15, 2025
கிரிக்கெட் பேட் அளவு எவ்வளவு இருக்கலாம்?

டி20 போட்டிகளில் கூட 200க்கு மேல் ரன்கள் அடிப்பது சர்வ சாதாரணமாகிவிட்ட சூழலில் கிரிக்கெட் பேட்களை அவ்வபோது சோதிப்பது அவசியமாகிறது. ஆகையால்தான், மைதானத்திலேயே பேட்டை சோதிக்கும் முறையை BCCI அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பேட்டின் அகலம் அதிகபட்சம் 10.8 செமீ, நீளம் அதிகபட்சம் 96.5 செமீ, ஆழம் அதிகபட்சம் 6.7 செமீ, பக்கங்கள் அதிகபட்சம் 4 செமீ மட்டுமே இருக்கலாம்.
Similar News
News January 20, 2026
விபத்தில் சிக்கிய அக்ஷய் குமாரின் பாதுகாப்பு கார்

மும்பை ஜூஹுவில் ஒரு மெர்சிடிஸ் கார் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளனது. இதில், அந்த ஆட்டோ அக்ஷய் குமார் பாதுகாப்பு சென்ற கார் மீது மோதியது. அக்ஷய் குமார் மற்றும் அவரது மனைவி ட்விங்கிள் கன்னா வேறொரு காரில் இருந்ததால், அவர்களுக்கு நேரடியாக எந்த பாதிப்பும் இல்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
News January 20, 2026
லைட் போட்டுக் கொண்டு தூங்கலாமா?

இரவில் லைட் போட்டுக் கொண்டு தூங்குபவர்களுக்கு இதய நோய் பாதிக்கும் ஆபத்து அதிகரிப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. 89,000 பேரின் இதய செயல்பாடு தொடர்ந்து ஆராயப்பட்டதில், வெளிச்சத்தில் உறங்குபவர்களுக்கு, இருளில் உறங்குபவர்களைவிட ஹார்ட் அட்டாக் ஆபத்து 47%, இதய செயலிழப்பு ஆபத்து 56% அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உடல் செயல்பாடு சீராக இருக்க, இரவில் வெளிச்சமில்லாத சூழலில் உறங்குவது நல்லது.
News January 20, 2026
பிக்பாஸ் திவ்யாவை பாதித்த அந்த விஷயம்

பிக்பாஸ் வெற்றியையடுத்து, தனது திருமணம் பற்றி திவ்யா கணேசன் பகிர்ந்த தகவல் SM-ல் வைரலாகிறது. தன்னுடைய Ex-காதலன் பிரபல வில்லன் நடிகர் ஆர்.கே.சுரேஷ் என்றும், 2018-ல் இருவருக்கும் நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில், திடீரென திருமணம் நின்றதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் தன்னை மிகவும் பாதித்ததாகவும், இதனால் பிறரை நம்புவதற்கே பயமாக இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.


