News April 15, 2025
தங்கையின் இழப்பை நினைத்து உருகிய சிம்ரன்

சிம்ரனின் தங்கை மோனலின் 23-வது ஆண்டு நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், சிம்ரன் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த 23 வருடங்களில் தங்கையை நினைக்காத நாளே இல்லை எனவும், மோனல் மறைந்திருக்கலாம் ஆனால் யாராலும் மறக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ‘பார்வை ஒன்றே போதுமே’, ‘பத்ரி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த மோனல், கடந்த 2002-ம் ஆண்டு தனது 21 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News August 13, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

காலை 11: 30 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17389919>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. ஜூலை 24, 1860.
2. குறிப்பறிதல்
3. ஹென்றி ஏ. பிஷெல் (USA)
4. கருவிழி
5. கார்பன் டை ஆக்சைடு (CO2)
நீங்க எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க
News August 13, 2025
கூலி ஓபனிங் சீன்.. வெளியான முதல் Review

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை உலகெங்கும் ‘கூலி’ படம் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் அறிமுக காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், ரஜினியின் ஒரு மாஸான திரை விருந்து ரசிகர்களுக்காக காத்திருப்பதாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார். அத்தோடு, ரஜினிகாந்தின் 50 ஆண்டு சினிமா பயணத்திற்கும் அவர் வாழ்த்து கூறியுள்ளார். நீங்கள் கொண்டாடத் தயாரா?
News August 13, 2025
Group Examக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்காக விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இதுவரை தேர்வுக்கு 4.46 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகள் மூலம் காலியாக உள்ள 645 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. முதல்நிலை தேர்வு செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறுகிறது. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் <