News April 15, 2025
அலர்ட்: Toilet-ல் Phone யூஸ் பண்றீங்களா?

டாய்லெட்டில் அதிக நேரம் போன் பயன்படுத்துவதால் பல நோய்கள் வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதால், Posture பிரச்னைகள் வரக்கூடும். குடல், இரைப்பை சார்ந்த நோய்கள், வயிற்றுப்போக்கு, மூல பாதிப்பு ஏற்படும் அபாயங்களும் உள்ளன. மேலும், கழிப்பறையில் உள்ள பாக்டீரியாக்கள் போனில் ஒட்டிக் கொள்வதால், அது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் நோய்களை ஏற்படுத்தும்.
Similar News
News February 3, 2026
யாரையும் எதிரிகளாக பார்ப்பதில்லை: CM ஸ்டாலின்

தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி இன்னும் 2 நாள்களில் பணிகள் தொடங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தை குழுவும் விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், புதிய எதிரிகள் (விஜய்) பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, யாரையும் எதிரிகளாக பார்ப்பதில்லை, அனைவரையும் நண்பராகவே பார்க்கிறேன்; மதிக்கிறேன் என CM பதிலளித்தார்.
News February 3, 2026
ஜன நாயகன் படம் வந்தால்.. டி. ராஜேந்தர் அதிரடி!

‘ஜன நாயகன்’ படம் ரிலீஸ் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. படம் எப்போது வெளிவரும் என்பது தெரியாத நிலையில், ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர். இந்நிலையில், பிப். 6-ம் தேதி ‘ஜன நாயகன்’ படம் ரிலீசானால், ரிரிலீசாகும் ‘உயிருள்ளவரை உஷா’ படத்தை தள்ளிப்போடவும் தயார் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். 1983-ல் வெளியான டி.ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’ படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
News February 3, 2026
5 நாள்களில் வெள்ளி விலை ₹1.45 லட்சம் குறைந்தது.. HAPPY

தங்கம் விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கி ஷாக் கொடுத்தாலும் வெள்ளி விலை குறைந்து, நகைப் பிரியர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 5 நாள்களில் மட்டும் 1 கிலோவுக்கு ₹1.45 லட்சம் குறைந்துள்ளது. இதனால் தற்போது 1 கிராம் ₹280-க்கு விற்கப்படுகிறது. தங்கம் போன்றே வெள்ளி நகைகளிலும் ஆர்வம் காட்டுவோர், இன்று நகைக் கடைகளுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர்.


