News April 15, 2025
திருமணத் தடை நீக்கும் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீபிரஹன்நாயகி சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிரம்மஹத்தி தோஷம் மற்றும் திருமணத் தடை உள்ளவர்கள், இந்த கோயிலின் மாடத்தில் உள்ள சுயம்பு வடிவமாக காட்சி அளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும். உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 17, 2025
கள்ளக்குறிச்சி இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு வரும் 20ம் தேதி கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ் கல்லூரி மைதானத்தில் காலை 9:30 மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர்கள் 1.9.2006 தேதி அன்றோ அதன் முன்போ பிறந்திருக்க வேண்டும். இத்தேர்வில் பங்குபெறும் அனைத்து வீரர்களும் ஆதார் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
News April 17, 2025
போலி துனை வட்டாட்சியர் முத்திரை; ஒருவர் கைது

சங்கராபுரம் அடுத்த புத்திராம்பட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் தனது 3 கூட்டாளிகளுடன் இணையந்து பல நில மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் இடத்திற்கு அருகாமையில் இருந்த 15 செண்ட் புறம்போக்கு நிலத்தை போலி சான்றிதழ்கள் மூலம் தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து வட்டாட்சியர் விஜயன் அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியன் போலீசார் கைது செய்தனர்.
News April 16, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஏப்ரல் 16-ம் தேதி இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.