News April 15, 2025
பணவீக்கம் என்றால் என்ன?

நாம் வாங்கும் பொருள்களின் விலை ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு உயருகிறது என்பது பணவீக்கமாக குறிப்பிடப்படுகிறது. அதாவது, நீங்கள் கடந்த ஆண்டு ₹100க்கு வாங்கிய ஒரு பொருள், இந்த ஆண்டு ₹105க்கு விற்றால் அதன் பணவீக்கம் 5% ஆகும். இந்தியாவில் 4% பணவீக்கம் என்பது சராசரியாக பார்க்கப்படுகிறது. அதற்கு அதிகம் போனால், மக்கள் வாங்கும் திறனை இழப்பார்கள். 4%ஐ விட குறைந்தால் நாட்டின் வளர்ச்சி தடைபடும்.
Similar News
News April 19, 2025
ஏசி புறநகர் ரயிலில் பயணிக்க எவ்வளவு கட்டணம்?

கோடையை சமாளிக்க சென்னையில் ஏ.சி புறநகர் ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது. இதில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் ₹35. பீச்-செங்கல்பட்டு வரை ₹105. தாம்பரம்-பீச் மார்க்கத்தில் 5.45AM-க்கு ( ALL STOPS) புறப்படும். பீச்-செங்கல்பட்டு 7AM-க்கும், 3.45 PM-க்கும் இயக்கப்படும். செங்கல்பட்டு-பீச் 9AM-க்கு, 5.45 PM-க்கு, பீச்-தாம்பரம் 7.35 PM-க்கும்( ALL STOPS) இயக்கப்படும். ஞாயிறு சேவை இல்லை.
News April 19, 2025
2026 தேர்தல்: தவெக ஐடி விங் ஆலோசனை!

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள திருமண கூடத்தில் தவெகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் ஐடி மற்றும் சோஷியல் மீடியா பிரிவு சார்பில் நடந்த இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். 2026 தேர்தல் வியூகம் பற்றி ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
News April 19, 2025
திருமணம் ஆகாமலே பிரபல நடிகை கர்ப்பமா?

அண்மையில் பிரபல பாலிவுட் நடிகை அமிஷா படேல் பகிர்ந்துள்ள போட்டோ நெட்டிசன்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த போட்டோவில் அவர், ‘Baby bump’ உடன் இருப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், நடிகை அமிஷாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தமிழில் விஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்திருந்தார்.