News April 15, 2025
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டப்பாறை, ஸ்ரீவைகுண்டம் என 8 இடங்களில் அரசு மானியத்துடன் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் பராமரிப்பு பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் சேர்ந்து பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று (ஏப்.15) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 22, 2025
தூத்துக்குடி: அதிகாரிகளை விளாசிய கலெக்டர்

தூத்துக்குடி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், வில்லிசேரி விவசாயி பிரேம்குமார் உளுந்துக்கான கொள்முதல் பணம் 4 மாதமாக வழங்கப்படவில்லை என முறையிட்டார். கலெக்டர் இளம்பகவத், அவர்களுக்கு 4 மாதமாக பணம் வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது; உங்களுக்கு இதைவிட வேறு என்ன வேலை?, ஒரு மாத ஊதியம் வழங்காவிட்டால் பொறுப்பீர்களா? உடனே சென்னை சென்று, பணம் கிடைக்க ஏற்பாடு செய்த பின் தான் இங்கே வர வேண்டும் என உத்தரவிட்டார்.
News August 21, 2025
தூத்துக்குடி இரவுநேர ஹலோ போலீஸ் ரோந்து காவலர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிகளை கண்காணிக்கவும் தூத்துக்குடி காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், கோரம்பள்ளம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து ரோந்து பணியில் ஈடுபடும் இரவு நேர காவலர்கள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News August 21, 2025
தூத்துக்குடி: வீட்டு ஓனரின் அநியாயத்துக்கு Full Stop!

தூத்துக்குடி மக்களே நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் தூத்துக்குடி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000479, 9445000481, 9445000480) புகாரளியுங்க.SHARE பண்ணுங்க