News April 15, 2025

மகளிர் உரிமைத் தொகை: வங்கி கணக்கை செக் பண்ணுங்க

image

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் 20-வது தவணை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சற்றுமுன் வரவு வைக்கப்பட்டது. ஒரு கோடியே 6 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஏப்ரல் மாதத்திற்கான ₹1,000 செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக ₹10,600 கோடி செலவிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான நபர்களைச் சேர்க்க விரைவில் விரிவாக்க அறிவிப்பு வெளியாகவுள்ளது. உங்கள் குடும்பத்திற்கு ₹1000 வருகிறதா?

Similar News

News April 19, 2025

ஆசிரமத்தில் குழந்தைகளுக்கு மின்சார ஷாக் தண்டனை!

image

மும்பையின் தானே பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 29 குழந்தைகள் நரக வேதனையை அனுபவித்துள்ளனர். ஆசிரம இயக்குனர் பாபன் ஷிண்டே டெய்லி மது அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளார். இது குறித்து புகார் செய்தால், அவர்களுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்திருக்கிறார். இந்த ஆசிரமத்தில் இருந்து தொண்டு நிறுவனத்தால், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் இது குறித்து உண்மையை வெளியே சொல்லி விட்டனர். இவர என்ன பண்ணலாம்?

News April 19, 2025

மதிமுகவில் இருந்து துரை வைகோ விலகல்!

image

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை சத்யாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அண்மையில் நடந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் வைகோ ஈடுபட்டார். இந்நிலையில், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும், ஆனாலும் அடிப்படை தொண்டனாக கட்சியில் இருப்பேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

News April 19, 2025

திமுக வரலாற்று தோல்வியை சந்திக்கும்: எல்.முருகன்

image

திமுக வரலாற்று தோல்வியை சந்திக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திருவள்ளூரில் நேற்று பேசிய CM ஸ்டாலின், எந்த ஷா வந்தாலும் TNல் ஆட்சியை பிடிக்க முடியாது என கூறியிருந்தார். இந்நிலையில், 2026-ல் திமுகவுக்கு தோல்வி காத்திருக்கிறது என எல்.முருகன் பதிலளித்துள்ளார். NDA கூட்டணி பெரிதாக சாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!