News April 15, 2025
டாய்லெட் பேப்பரில் ராஜினாமா கடிதம்.. இது வேற ரகம்

பல நிறுவனங்களில் ஊழியர்களை தேவைக்கு பயன்படுத்திவிட்டு பின் குப்பை போல் தூக்கி எறிவதை பார்த்திருப்போம். இதனை உணர்த்தும் வகையில் ஊழியர் ஒருவர் ராஜினாமா செய்த விதம் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. சிங்கப்பூரில் தன்னை சரியாக நடத்தாத நிறுவனத்துக்கு, டாய்லெட் பேப்பரில் ஊழியர் ராஜினாமா கடிதத்தை எழுதியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை Linkedin பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Similar News
News April 19, 2025
மீன்கள் விலை கிடுகிடு உயர்வு!

தூத்துக்குடி துறைமுகத்தில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சீலா மீன் ₹1,300, விளமீன், ஊளி மீன், பாறை மீன், நண்டு ஆகியவை தலா ₹600, கீழவாளை, பண்டாரி, தம்பா மீன்கள் தலா ₹300 – ₹600 வரை விற்பனையாகிறது. ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் என்பதால் தென் மாவட்டங்களில் சில்லறை விலையில் 1 கிலோவுக்கு ₹50 – ₹100 வரை அதிகரித்துள்ளது. உங்கள் ஊரில் ஒரு கிலோ மீன் விலை என்ன?
News April 19, 2025
தங்க குண்டு மணி, பழங்கால பானை கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தங்க குண்டு மணி, பழங்கால பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் அகழாய்வில் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அந்த வகையில் ஆபரணங்களிலும் தமிழர்கள் அதிக கவனம் செலுத்தியதற்கான சான்று கொடும்பாளூரில் நடந்த அகழாய்வில் கிடைத்துள்ளது. அதனுடன் அழகிய மண்பானையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
News April 19, 2025
ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆந்திர துணை சபாநாயகர் ரகுராம கிருஷ்ண ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார். குண்டூரில் ரத்தன் டாடாவின் சிலையை திறந்து வைத்து பேசிய ராஜூ, கல்வி, மருத்துவ துறைகளில் அவர் செய்த சாதனைகள் அளப்பரியவை என புகழ்ந்தார். ரத்தன் டாடாவின் சேவைகளை நினைவுகூரும் வகையில் பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.