News April 15, 2025
தென்காசி:பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்க.
Similar News
News April 16, 2025
தென்காசி பயணிகளுக்கு குட் நியூஸ்

அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்ட பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறும் முறை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை பயன்படுத்தி QR கோடு ஸ்கேன் செய்தோ ( G-PAY, PHONE PAY) போன்ற பரிவர்த்தனை செய்தோ பணப்பரிமாற்றம் செய்து டிக்கெட் பெறலாம் என கூறியுள்ளனர். SHARE!
News April 16, 2025
ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

தென்காசி மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
News April 16, 2025
குறைகளை அனுப்ப தென்காசி எம்பி வேண்டுகோள்

தென்னக ரயில்வே வருடாந்திர ஆலோசனைக் கூட்டம் வரும் ஏப்ரல் கடைசி மாதத்தில் நடைபெற உள்ளது. தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் ரயில்வே துறை சார்ந்த கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை எனக்கு தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப் நம்பர் 6382081840 மூலமாக தெரிவிக்குமாறு தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்