News April 3, 2024
தைவான் மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

தைவான் நிலநடுக்கத்தால் 9 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நிலநடுக்கத்தால் பலியானவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த சோக சம்பவத்திலிருந்து தைவான் மக்கள் மீண்டு வர ஒத்துழைப்போம் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
Similar News
News January 31, 2026
தங்கம் விலை தலைகீழாக குறைகிறது!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 9 சதவீதம் அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று ஒரு அவுன்ஸ் (28.35g) தங்கத்தின் விலை $5,595.46-ஆக உச்சத்தை எட்டியது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $434.45 குறைந்து $4,895-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியும் $29.16 ஆக சரிவை எட்டியுள்ளது. இதன் காரணமாக இன்று இந்திய சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளது.
News January 31, 2026
வேணுகோபால் வருகை வெற்றி பெறுமா?

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்., பொதுச்செயலாளர் KC வேணுகோபால் நாளை TN-க்கு வருகை தர உள்ளார். தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு என கேட்கும் மாணிக்கம் தாகூர் கோஷ்டி ஒரு பக்கம், திமுக கூட்டணியில் இருப்பதே போதும் என மல்லுக்கட்டும் SP கோஷ்டி மறுபக்கம் என TN காங்., தகித்து கிடக்கிறது. இந்நிலையில் திமுகவுடன் பேச வரும் வேணுகோபாலின் வருகையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
News January 31, 2026
வெறும் வயிற்றில் இந்த 5 பழங்களைச் சாப்பிடுங்க!

நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள காலை உணவு என்பது மிக முக்கியமானது. அதிலும் சில குறிப்பிட பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றன. மேலும் செரிமானத்திற்கு வழி வகுக்கும். அந்த 5 பழங்கள் எவை என்பதை தெரிந்துகொள்ள வலதுபக்கம் SWipe செய்து பாருங்க.


